11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 10 மணி தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. தேர்வை எழுதி முடித்தமாணவர்கள், தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததாகவும், இதில் ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமானதாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இதேபோல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 7.73 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்காக தமிழ்நாட்டில் 3224 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 40 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் கண்காணிப்பாளர்கள் உட்பட மாணவர்கள் யாரும் மொபைல் பய்னபடுத்தக்கூடாது என்று ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், பறக்கும் படையினர் மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக இல்லாமல் மாணவர்களின் மனநிலை பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.