12 மணி நேர வேலை தொடர்பான, தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது..
தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்படுகிறது. இதனால், தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், மதிமுக, மமக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மசோதா நிறைவேற்றம்:
unknown nodeசட்டமன்ற தேர்வுக்குழுவுக்கு சட்ட மசோதாவை அனுப்ப வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியது. 8 மணி நேர வேலை என்பதை நீர்த்து போக செய்கிற வகையில் சட்ட மசோதா இருப்பதாக கூறி கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், 12 மணி நேர வேலை தொடர்பான 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
அமைச்சர்கள் விளக்கம்:
தினசரி 12 மணி நேரம் என வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற முறையை இச்சட்டம் கொண்டுள்ளது. இது தொழிலாளர்களின் விருப்ப தேர்வாகவே இருக்கும், கட்டாயம் அல்ல என அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் சி.வி.கணேசன் விளக்கம் அளித்தனர்.
அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கம்:
unknown nodeஅமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்துவிட்ட பிறகு 5வது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்கு சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை, விரும்பக்கூடிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் எனவும் பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் மேலும் விளக்கமளித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்:
unknown nodeஅமைச்சர் தங்கம் தென்னரசு, குறிப்பிட்ட தொழில்களுக்கு மட்டும் தான் இந்த சட்ட திருத்தம் அமையும். வேலை பார்ப்பவர்கள் தன்னார்வ அடிப்படையில் செய்கிறோம் என சொன்னால் அது செயல்படுத்தப்படும். யார் அதை விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இந்த சட்ட திருத்தம் பொருந்தும். அனைவருக்கும் 12 மணி நேரம் வேலை கிடையாது எனவும் விளக்கமளித்தார்.