தமிழகத்தில் ஒரே நாளில் 132 ரவுடிகள் கைது – ஐஜி சங்கர் தகவல்

Police say 132 rowdies have been arrested in a single day in the run-up to the assembly elections.

சட்டமன்ற தேர்தலையொட்டி ஒரே நாளில் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக சேது வருகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில், எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல்துறை முன்னேற்பாடுகளை கையாண்டு வருகிறது.

அந்தவகையில் தமிழகத்தில் ஒரே நாளில் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளன. கடலூரில் 46, திருவள்ளூரில் 38, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 10 உள்ளிட்ட மொத்தம் 132 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி ரவுடிகள் மீது நடவடிக்கை என வடக்கு மண்டல ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.