கொரோனாவால் தமிழகத்தில் 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்!

1,400 children have lost their parents in Tamil Nadu due to corona. The Tamil Nadu government has already announced benefits for orphans.

கொரோனாவால் தமிழகத்தில் 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவில் பரவி வருவதுடன், உயிரிழப்புகளையும் அதிகளவு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா முழுவதும் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் அதிகளவிலான பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது போல தமிழகத்திலும் கொரோனாவால்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதிலும் இதுவரை 1,400 குழந்தைகள் பெற்றோரை இழந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழந்தைகளில் பலர் பெற்றோர்கள் இருவரையும் இழந்துள்ளதாகவும், சிலர் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு ஏற்கனவே சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதன்படி கொரோனாவால் பெற்றோர்கள் இருவரையும் இழந்து உள்ள குழந்தைகளுக்கு 5 லட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மூன்று லட்சமும் வைப்புத் தொகையாக வங்கிகளில் வைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.