தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழக அரசு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
பால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது.
குறிப்பிட்ட முக்கிய அலுவலகங்களை தவிர மற்ற அரசு அலுவலங்கள் அனைத்தும் மூடல்.
மருத்துவமனைகள் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதில் தடை இருக்காது.
வங்கிகள் ஏடிஎம்கள் வழக்கம் போல் செயல்படும்.
பால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தடை இருக்காது.
ஆவின் பால் விற்பனையாளர்கள் அம்மா உணவகங்கள், காய்கறி, இறைச்சி கடை போன்றவை வழக்கம் போல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், திருமண நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 30 பேரை மட்டுமே பங்கேற்க வேண்டும்.
ஹோட்டல்களில் பார்சல் வழங்க மட்டும் அனுமதி அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.