தமிழகத்தில் மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான, முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்வு செய்யப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு பரிசுத்தொகையும், கேடயமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், 2021-22, 2022-23-ஆம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதை முதலமைச்சர் வழங்கினார்.
அதன்படி, இந்த விருதிற்கு தேர்வான 6 ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. மேல்மருவத்தூர், குளூர், நிபஞ்சப்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம் மற்றும் அரியனேந்தல் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின். மாநில அளவில் சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான கிராம விருது ஊரக வளர்ச்சி துறை சார்பில் வழங்கபடுகிறது.
unknown node