16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடி தள்ளுபடி – அரசாணை வெளியீடு

16,43,347 farmers get Rs 12,110.74 crore crop loan waiver

விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்தவாறு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.