கொரோனா தொற்றிய இளைஞருடன் பயணித்த 193 பேர் தனிமைப்படுத்தல் – விஜயபாஸ்கர்!

இந்தியா முழுவதும் அரசாங்கம் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் எதிர்ப்புகாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாளை ஒருநாள்

இந்தியா முழுவதும் அரசாங்கம் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் எதிர்ப்புகாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், அனைவரும்  சுய  ஊரடங்கு உத்தரவை   கடைபிடிக்க வேண்டும் என மோடி அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் மு.க ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஜயபாஸ்கர்,அயர்லாந்தில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து கடந்த 17-ம் தேதி ரயில் மூலம் சென்னை வந்த 21 வயது மாணவனை  ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

அயர்லாந்து இளைஞருடன் ரயிலில் பயணம் செய்த 193 பேரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக   சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார் .