தமிழகத்தில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அமைச்சர்!

Minister Ma Subramanian said that corona has not been eradicated in Tamil Nadu and 1,956 new cases have been confirmed.

தமிழகத்தில் கொரோனா ஓயவில்லை எனவும், மேலும் 1,956 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா மூன்றாம் அலையை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதிலும், குறிப்பாக கொரோனா பரவல் அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், இன்னும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் ஓயவில்லை எனவும், தமிழகத்தில் மேலும் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தனி நபர் இடைவெளி கேள்வி குறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது எனவும் தெரிவித்து உள்ளார்.