அதிமுக நிர்வாகிகள் 2 பேர் நீக்கம் – இபிஎஸ் அறிவிப்பு

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான ஜான் கென்னடி, சுதாகர் பிரசாத் ஆகிய 2 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

edappadipalanisamy hc

ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான ஜான் கென்னடி, சுதாகர் பிரசாத் ஆகிய 2 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த ஜான் கென்னடி, சுதாகர் பிரசாத் ஆகியோர் இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.