#Breaking: தமிழகத்தில் மேலும் 2 பேர் பலி..72 பேருக்கு கொரோனா.!

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 22 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,755 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 22 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 1,683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 1,755 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. சோகத்திலும் ஒரு சந்தோசம் என்னவென்றால் இன்று மட்டும் 114 பேர் வைரஸில் இருந்து குணமடைந்த நிலையில்,  இதுவரை 866 பேர் வீடு திரும்பியுள்ளார்கள். இதையடுத்து இன்று மட்டும் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிலவரம் :

வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்கள் : 25,503

அரசு கண்காணிப்பில் இருப்பவர்கள் : 19

28 நாட்கள் முடிந்து வீடு திரும்பியவர்கள் : 87,159

இன்று மட்டும் பரிசோதனை மாதிரிகள் : 6,426

இதுவரை மொத்தம் பரிசோதனை மாதிரிகள் : 72,403

தமிழகத்தில் இதுவரை மொத்தம் பாதிப்பு : 1,755

கொரோனா வார்டில் சிகிச்சை பெறுபவர்கள் : 864

கொரோனாவுக்கு உயிரிழப்பின் எண்ணிக்கை : 22

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை : 866

unknown nodeunknown node