இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்கள் – 12 நாட்கள் நீதிமன்ற காவல்..!

12 days court custody for 22 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy

Arrest

இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 22 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இலங்கை கடற் படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேருக்கு 12 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.