கர்நாடகாவில் இருந்து 2,40,000 கன அடி நீர் திறப்பு ! மேட்டூரில் ஒரே நாளில் 10 அடி உயர்வு !

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது .இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது. கபினி அணை

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடகாவில் கன மழை பெய்து வருகிறது .இதனால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணாராஜா சாகர அணைகள் வேககமாக நிரம்பி வருகிறது. கபினி அணை நிரம்பி உள்ளதால் நேற்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 1,20,000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

மேலும் நேற்று கிருஷ்ணாராஜா சாகர அணையில் இருந்து 500 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது அணை நிரம்பியதால்  கிருஷ்ணாராஜா சாகர அணையில்  இருந்து 1,20,000  கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு அணைகள் மூலம்  காவேரி ஆற்றிக்கு  2,40,000 கன அடி  நீர் திறக்கப்பட்டு  உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் ஒரே நாளில் 10 அடி  நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.