ஒரே வாரத்தில் உலக அளவில் பேசப்பட்ட 3 தமிழர்கள் ..!

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும் அவற்றில் சில செய்திகளை மட்டுமே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.சமூக வலைதளங்களில் கடந்த ஒரு

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்கள் நடந்தாலும் அவற்றில் சில செய்திகளை மட்டுமே சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று தமிழர்கள் குறித்த செய்திகள் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன.

அதில் முதலிடத்தில் மதுரையை சார்ந்த சுந்தர்ப்பிச்சை தொழில்நுட்பத்தை தன் கையில் வைத்திருக்கும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.

சுந்தர்ப்பிச்சை பொறுப்பில் கூகுள் நிறுவனம்  சிறந்த வளர்ச்சி பெற்றதால் ஆல்பபெட் நிறுவனத்திற்கும்  மேலும் 8 நிறுவன தலைமை அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்ததாக மதுரையை சேர்ந்த சண்முகம் சுப்ரமணியன் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

இவர் காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்ததாக கூறி நாசவே பாராட்டியதால் இவர் உலகம் முழுவதும் பேசப்பட்டார்.மூன்றாவதாக திருவண்ணாமலையை சார்ந்த நித்யானந்தா. இவர் வித்தியாசமான முறையில் உலக அளவில் பேசப்பட்டார்.

நித்யானந்தா பாலியல் புகார் , ஆசிரம பெண்களைக் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பிரபலமானவர்.இதை தொடர்ந்து சில நாட்கள் முன் கைலாசம் என்று தனி நாடு வழங்கி உள்ளதாகவும் கூறி உலகம் முழுவதும் பேசப்பட்டார்.