களைகட்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 4 பேர் காயம்..!

At Avaniapuram Jallikkat, two bull owners, one cowherd and one spectator have been injured so far Corona prevention regulation gravel

பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

இந்த ஜல்லிக்கட்டில் மொத்தமாக 800-க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் 430 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில்  தற்போது வரை காளைகளில் உரிமையாளர்கள் இருவர், மாடுபிடி வீரர் ஒருவர் மற்றும் பார்வையாளர் ஒருவர் என 4 பேர் காயமடைந்துள்ளனர்.

பார்வையாளர் பலத்த காயம் அடைந்துள்ளதால் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.