வேனும், தண்ணீர் லாரியும் மோதி கோர விபத்து – 4 பெண்கள் உயிரிழப்பு..,15 பேர் படுகாயம்!

Four people were death when a private van carrying women collided with a water truck.

பெண்களை பணிக்கு அழைத்து சென்ற தனியார் வேன், தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் சில்லாநத்தம் பிரதான சாலையில் தனியார் நிறுவன வேனும், தண்ணீர் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்ததாகவும், 15 படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதியமுத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற வேன், எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில், மணிமேகலை, காமாட்சி, செல்வராணி மற்றும் சந்தான லட்சுமி ஆகிய 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் பணியாளர்களை பணிக்கு அழைத்து சென்ற வேன் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.