மனநல காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி.!

Corona has been confirmed for 46 people following a confirmation by Corona to the administrator of a private psychiatric ward.

தனியார் மனநல காப்பக நிர்வாகிக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மந்தாரம்புதூரில் உள்ள தனியார் மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த மனநல காப்பகம் நிர்வாகிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மனநல காப்பகத்தில் இருந்த 80க்கும் மேற்பட்ட மனநல சிகிச்சை பெறுவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. அதில் 46 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் அம்மாவட்டத்தில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 15,300 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்திருக்கிறது என்பது குறிப்பிடப்படுகிறது.