#BREAKING: 5 கி.மீ. வேகத்தில் நகரும் நிவர் புயல்..!

Hurricane Nivar is currently moving at a speed of 5 kilometers per hour, having reached a speed of four kilometers this morning.

சென்னைக்கு கிழக்கே சுமார் 450 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள “நிவர்” 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக  நிவர் நாளை கரையைக் கடக்க உள்ளது. காரைக்கால், மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர், பின்னர் 15 கிலோ மீட்டராக குறைந்தது. இன்று காலை நான்கு கிலோமீட்டர் வேகத்தில் வந்த நிலையில் தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. 24 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.