குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்துக்கு  5 அடுக்கு பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை  விமான நிலையத்துக்கு  5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை  விமான நிலையத்துக்கு  5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி  ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.குறிப்பாக தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய புலனாய்வுத் துறை அறிவுறுத்தலின்படி மதுரை  விமான நிலையத்துக்கு  5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பு காரணமாக விமான நிலையத்துக்கு  வரும் பார்வையாளர்களுக்கு வருகின்ற 31 ஆம் தேதி வரை அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.