அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சேவையின் முதல் நாளான இன்று பெரம்பூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 50 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் எம்பி பறிப்பு தொடர்பாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமயத்தில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலை மறிக்க முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேரை காவல்துறை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது.