கடந்த 3 நாட்களில் 51 போலி மருத்துவர்கள் கைது...!சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!

போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்கள் அதிகமாக இருப்பதாக வந்த புகார்கள் எழுந்தது. இதனையடுத்து, கடந்த 3 நாட்களாக காவல்துறையினரும், மருத்துவ துறையினரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

51 போலி மருத்துவர்கள் கைது

இந்த சோதனையில், கடந்த 3 நாட்களில் மாநிலம் முழுவதும் 51 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரளா, ஆந்திராவில் மருத்துவராக பயில்வதற்கான விதிகள் வேறாக இருப்பதால், சிலர் தமிழ்நாட்டு விதிகளுக்கு உட்படாமல் தேனி, திருவள்ளூர் உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் சட்ட விரோதமாக மருத்துவர்களாக பணியாற்றிவருவதாக விசாரணையில் அதிகாரிகள் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது போன்ற போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.