51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்.. 11வது சுற்று முடிவிலும் காங்கிரஸ் தான் முன்னிலை!

அதிமுக வேட்பாளரை விட 51 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர்.

அதிமுக வேட்பாளரை விட 51 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 11 சுற்றுகள் முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 51 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகிறார். 11 சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 32,360 வாக்குகள் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 83,528 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மொத்தம் 15 சுற்றுகள் வாக்கு எண்ணப்படும் என அறிவித்திருந்த நிலையில், இதுவரை 11 சுற்றுகள் முடிந்துள்ளது. சுமார் 45 ஆயிரம் வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இதன் மூலம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியானது.