ஒப்புதல் கிடைத்ததும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி – ராதாகிருஷ்ணன்

Health Secretary Radhakrishnan said that corona vaccine rehearsals will be held in 11 places in Tamil Nadu tomorrow.

தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உருமாறிய கொரோனோவால் நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் மாறுபடவில்லை. மேலும், தமிழகத்தில் நாளை 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.