67.5 லட்சம் பேர் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி மாத கணக்கீட்டின் படி ஏறத்தாழ 67லட்சத்து 50ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பின்படி பதிவு செய்த 67 லட்சத்து 55 ஆயிரத்து 466 பேரில், 31 லட்சத்து 47 ஆயிரத்து 605 பேர் ஆண்களும், 36 லட்சத்து 07 ஆயிரத்து 589 பேர் பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்களில் 272 பேரும் பதிவு செய்துள்ளனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகளில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 814 பேரும், 18 வயதுக்குட்பட்டவர்களில், 18 லட்சத்து 74 ஆயிரத்து 522 பள்ளி மாணவர்களும், 19 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 28 லட்சத்து 09 ஆயிரத்து 940 கல்லூரி மாணவர்களும் 31 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களில் 18 லட்சத்து 34 ஆயிரத்து 217 பேரும், 46 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 2 லட்சத்து 30 ஆயிரத்து 976 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5,811 பேரும் பதிவு செய்துள்ளனர்.
unknown node