தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு 6 ம் வகுப்பு மாணவர் இறையன்பு கடிதம்!

தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற உள்ள நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் உணர்ச்சிப்பூர்வமான கடிதம்.

IRAI ANBU

தலைமைச் செயலாளர் இறையன்பு ஓய்வு பெற உள்ள நிலையில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் உணர்ச்சிப்பூர்வமான கடிதம்.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன் ஓய்வு பெற உள்ள நிலையில், கூடுவாஞ்சேரியை சேர்ந்த 6 ம் வகுப்பு மாணவர் இறையன்பு உணர்ச்சிப்பூர்வமான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், வணக்கம் ஐயா, என் பெயர் இறையன்பு. நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன், என் அண்ணன் ஆதித்யா, கல்லூரியில் படித்து வருகிறார். தங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக என் பெற்றோர்கள் மூலம் நான் அறிந்துகொண்டேன்.

என் அம்மாவும், அப்பாவும் தங்கள் பெயரையே எனக்கு வைத்துள்ளனர். உங்களை போலவே நான் பிறரிடம் அன்பாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்கள். நானும் அப்படி இருக்க முயற்சி செய்வேன். நான் வகுப்பில் நன்றாக படிப்பேன், என் அம்மாவின் மூலம் தங்களின் சிலா நகைசுவை கதைகளை கேட்டுள்ளேன், ஐயா நானும் எனது நபர்களும் மாலை நேரங்களில் விளையாடுவோம்.

எங்கள் தெரு மழைக்காலங்களில் மிகவும் குண்டும் குழியுமாகவும் மாறி விடுகிறது. நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. பலர் அதில் வழுக்கி விழவும் நேரிடுகிறது. தயவுகூர்ந்து எங்கள் தெருவிற்கு சாலை வசதி செய்து தருமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த மாணவன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த கடிதத்தை பார்த்த தலைமை செயலாளர் இறையன்பு, இன்று பிற்பகல் 3 மணியளவில் அந்த மாணவனை சந்திக்கிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.