நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் – முதல்வர் பழனிசாமி பங்கேற்பு.!

Chief Minister Palanisamy has participated in the 6th Executive Council meeting of the Finance Commission chaired by Prime Minister Modi.

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 6-வது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த கூட்டத்தில் வேளாண்மை, உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து விவாதிக்கப்படுகிறது. காணொலி மூலம் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.