போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு.
சென்னையில் மண்ணடி காளிங்கம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை, இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட 600 பேர் மீது கடற்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்று கோவையில் போராட்டம் நடத்திய கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மீது பந்தயசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை உட்பட வாரத்தின் 7 நாட்களும் கோயில்களை திறக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று மாநிலம் முழுதும் உள்ள முக்கிய கோயில்கள் முன் போராட்டம் நடந்தது.
அதன்படி, சென்னை காளிகாம்பாள் கோயில் அருகே நடந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மக்கள் குரலுக்கு செவி சாய்க்காவிடில் 10 நாட்களுக்கு பின் அரசே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.இந்த நிலையில் பாஜக தலைவர் உட்பட சுமார் 600 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…