நாளை 8 மாவட்டங்கள் ,இன்று 5 மாவட்டங்கள் ! அதீத கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

The Met Office has forecast heavy rains in 8 districts tomorrow and 5 districts today due to the Nivar storm.

நிவர் புயல் காரணமாக  நாளை 8 மாவட்டங்களிலும்  ,இன்று 5 மாவட்டங்களிலும் ,அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் :

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இன்று காலை புயலாக வலுவடைந்தது.தற்போது நிவர் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகேநாளை பிற்பகலில் கரையை கடக்கவுள்ளது.ஆகவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

3 மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு :

இந்நிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிவர் 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும் .சென்னைக்கு தென்கிழக்கே 450 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்,புதுச்சேரியின் தென்கிழக்கே 410 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாளை 8 மாவட்டங்களில்  அதீத கனமழைக்கு வாய்ப்பு :

சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.நாளை 8 மாவட்டங்களில்  அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.திருவண்ணாமலை,புதுச்சேரி,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,அரியலூர்,பெரம்பலூர்,கடலூர்,மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

5 மாவட்டங்களில் காற்று வீச வாய்ப்பு :

புயல் கரையை கடக்கும்போது 5 மாவட்டங்களில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது.அதாவது, செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும் .மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.