தமிழகத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா .!

தமிழகத்தில் நேற்று காலை வரை கொரோனா வைரஸால்  18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

தமிழகத்தில் நேற்று காலை வரை கொரோனா வைரஸால்  18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதையெடுத்து  5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில்  4 பேர் இந்தோனோசியாவை சார்ந்தவர்கள் , இவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த சென்னையை சார்ந்த ஓருருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

பின்னர் நேற்று இரவு மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதனால் நேற்று மட்டும் தமிழகத்தில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதன் காரணமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தவர்களில்நேற்று  டெல்லி சார்ந்த  ஒருவர் குணமடைந்து உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.