அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகள் ரத்து!

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

Minister Sivashankar

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போது, விதிகளை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கருக்கு எதிராக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனை எதிர்த்து அமைச்சர் சிவசங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். உள்நோக்கத்துடன் தன்னை துன்புறுத்தும் நோக்கில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வாதத்தை ஏற்று 9 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.