மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலை திறப்பு.!

Chief Minister Palanisamy unveiled a statue of the late Chief Minister Jayalalithaa at the Lady Wellington College campus.

லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் கே.பி அன்பழகன் முன்னிலையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி. இதையடுத்து கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், அக்கல்லுரில் உள்ள உயர்கல்விமன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர்சூட்டி திறக்கப்பட்டது. ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் அண்ணா பல்கலைகழகம் மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன் ஈடுபட்டுள்ளது. சிலை மீது போர்த்தப்பட்டுள்ள பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலம் நீக்கப்பட்டு, 9 அடி உயர வெண்கல சிலை மீது மலர்த்தூவி சிறப்பு மரியாதை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.