இந்த மாவட்டத்தில் இன்று 90 டாஸ்மாக் கடைகள் அடைப்பு..!

District Collector Senthilraj said that 90 Tasmac stores in important places in Thoothukudi district will be closed for one day today.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பசுபதிபாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் உள்ள 90 டாஸ்மாக் கடைகள் இன்று ஒருநாள் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.