தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 90541 பேர் – பீலா ராஜேஷ்.!

சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று நேரத்திற்குமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழகத்தில் இன்று  74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சற்று நேரத்திற்குமுன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , தமிழகத்தில் இன்று  74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்தமிழகத்தில்கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை485 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் இதுவரை 422 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என கூறினார்.

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 90541 பேர் உள்ளதாகசுகாதாரத்துறை செயலர்பீலா ராஜேஷ் தெரிவித்தார்.