ஆசிரியர் தகுதி தேர்வின் 2-வது தாள் தேர்வில் 95% பட்டதாரிகள் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல்.
தமிழகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிக்கான (டெட் 2-ம் தாள் தேர்வு) கடந்த பிப்ரவரி 3 முதல் பிப்.14 வரை கணினி வழியில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான நடத்தப்பட்ட டெட் 2-ம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. TN TET என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பணியிடங்களில் ஆட்சேர்ப்புக்கு நடத்தப்படும் மாநில அளவிலான தேர்வு ஆகும்.
www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. தேர்வு முடிவு வெளியானதை அடுத்து, இந்த தேர்வுக்கு 4 லட்சம் பேர் தகுதி பெற்ற நிலையில், 1.5 லட்சம் பேர் தேர்வுக்கே வரவில்லை, ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாளில் 2 விழுக்காடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வின் 2-வது தாள் தேர்வில் 95% பட்டதாரிகள் தேர்ச்சி பெறவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை நடந்த 2-வது தாள் தேர்வில் 0.08% பட்டதாரிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இம்முறை 5% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2022-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் 19 வரை தேர்வு நடைபெற்றது.
தேர்வு எழுதிய 1.53 லட்சம் பேரில் 21,543 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அதாவது 14% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். டெட் 2-வது தாள் தேர்வு கடந்த மாதம் 3-ல் இருந்து 14 வரை தேர்வு நடைபெற்றது. 2.54 லட்சம் பேரில் 13,798 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.