9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் – ஆசிரியர்கள் அறிவுறுத்தல்

Teachers have advised 9th, 10th and 11th class students not to come to school from tomorrow.

9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்துள்ளனர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய முதல்வர் பழனிச்சாமி, பெற்றோரின் கோரிக்கையை ஏற்று 2020-21 ஆம் கல்வியாண்டில் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி ஆல்-பாஸ் என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்திருந்தார்.

கல்வி தொலைக்காட்சி, இணையம் மூலம் பாடம் கற்ற மாணவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீட்டு நெறிமுறைகளை தமிழக அரசால் விரிவாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தேர்வின்றி ஆல்-பாஸ் என முதல்வர் அறிவித்த நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஜூன் அல்லது ஜூலையில் பள்ளிகள் திறக்கப்பட பிறகு மாணவர்கள் வந்தால் போதும் என்றும் தெரிவித்தாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று குறைந்த நிலையில், கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் 9,10,11ம் வகுப்புகள் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.