பப்ஜிக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவன்.!

16 வயது சிறுவன் பப்ஜி கேமிற்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கள்ளிபாளையத்தில் 9ஆம் வகுப்பு படித்து வருபவர் அருண். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலர் ஆன்லைன் கேம்களில் அடிமையாகி விடுகின்றனர். அந்த வகையில் அருண் அவர்களும் பப்ஜி கேமிற்கு அடிமையாகி யுள்ளார். பெற்றோர்கள் கண்டித்தும் அவர் கேம் விளையாடுவதை நிறுத்தவில்லை.
இதனிடையே, பப்ஜி கேமிற்கு தடை விதித்தையொட்டி மன உளைச்சலுக்கு ஆளான அருணை பெற்றோர்கள் கோவை தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று மன நிலை சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால், கேமிலிருந்து மீண்டு வர இயலாத அருண் நேற்றிரவு அவரது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பப்ஜியால் பலர் உயிரழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.