தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்! ஒட்டுநர் உட்பட 5 பேர் இறங்கி தப்பியோட்டம்!

மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார், உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.

மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார், உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் – மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காரில் வந்த பயணிகள் மற்றும் ஒட்டுநர் உட்பட 5 பேர் இறங்கி தப்பியோட்டத்தை குடுத்தனர். உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக காரில் வந்த பயணிகள் உயிர் தப்பினர். மேலும்,  தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து தீயை அணைத்தனர் என்று கூறப்படுகிறது.