ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற உத்தரவுக்கு எதிரான ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் இன்று நடைபெற்றது. விசாரணையின்போது, இவ்வழக்கை நேரடியாக இறுதி விசாரணைக்கு எடுத்து வாதம் கேட்டு உத்தரவு பிறப்பிக்க அனைத்து தரப்புக்கு சம்மதமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மான மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணைக்கு தயார் என ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. அதிமுகவில் 95 சதவீதம் பேர் தனது தலைமையை ஏற்றுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தற்போது பொதுச்செயலாளர் பட்தவி மட்டுமே உள்ளது, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்த நடைமுறைகள் மட்டுமே எப்படி சரியாகும். இடைக்கால நிவாரணம் கிடைக்கும் வகையில் வழக்கை எடுத்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (03.04.2023) ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம். அதன்படி, இறுதி விசாரணையா? இடைக்கால நிவாரணமா? என்பது குறித்து 3-ஆம் தேதி தெரிய வரும்.