தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளை ஆண்டுதோறும் சென்னையில் இணையம் வாயிலாக பிரம்மாண்ட விழாவாக நடத்தப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாளன்று ஆண்டுதோறும் சென்னையில் இணையம் வாயிலாக பிரம்மாண்ட கலை விழா நடத்தப்படும் என்றும், சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் அறிவியல் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொல்லியல் நிறுவனம் என்ற பெயர் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் கண்காட்சியகவியல் நிறுவனம் என பெயர் மாற்றப்படும் எனவும், கடந்த திமுக ஆட்சியின் போது நடத்தப்பட்ட ‘சென்னையில் சங்கமம்’ போன்று மூன்று நாள் பாரம்பரிய கலைகளை அரங்கேற்று நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கீழடி அகழ் வைப்பகத்திற்கு தேவையான 34 நிரந்தர பணியிடங்கள் ரூ.1.50 கோடியில் ஏற்படுத்தப்படும் என்றும், தருமபுரி பெரும்பாலை உள்பட 7 இடங்களில் தொல்லியல் அகழாய்வு, களஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…