BJP [Imagesource : Mint]
அதிமுக-பாஜக முறிவுக்கு பின், அண்ணாமலை அவர்கள் டெல்லி சென்ற நிலையில், அங்கு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த நிலையில், இன்று சென்னையில் பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறவிருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பாஜக தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை அவர்கள் டெல்லி பயணத்தை முடித்து இன்னும் சென்னை திரும்பாததால், இந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் தலைமையில் இன்று பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. பாஜக தலைமையகமான கமலாலயத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் உள்ள நிலையில் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், கரு.நாகராஜன், வினோத் செல்வம், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில், மாவட்ட ரீதியாக கட்சி எவ்வாறு பலப்படுத்துவது, நாடாளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…