பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் எடுத்து சென்றதால் பரிதாப உயிரிழப்பு..!

Default Image

பச்சிளம் குழந்தையை துணிகளோடு கட்டைப்பையில் வைத்து எடுத்து சென்றதால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் 2016 ஆம் ஆண்டு காதலித்து தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது மீண்டும் தனலட்சுமிக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் கடந்த 12 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த குழந்தைக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த மருத்துவமனையில் இருந்து கணவன் சண்முகத்தை அழைத்து அங்கிருந்து பைக் மூலமாக கட்டைப்பையுடன் பல்லடத்திற்கு கிளம்பியுள்ளனர். மருத்துவமனையில் தாயும் சேயும் காணவில்லை என்பதால் பல்லடத்தில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு தனலட்சுமி குறித்து விசாரித்துள்ளனர். பின்னர் செவிலியர், வீட்டிற்கு வந்து தனலட்சுமியை பார்த்து மருத்துவமனையில் சொல்லாமல் வந்ததற்கான காரணத்தை விசாரித்துள்ளார். அப்போது தனலட்சுமி தனக்கு அங்கு இருக்க பிடிக்கவில்லை என்பதால் வந்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும், குழந்தையை பற்றி கேட்ட பிறகு தான் அதிர்ச்சியான சம்பவம் வெளிவந்துள்ளது.

திருப்பூர் மருத்துவமனையில் இருந்து குழந்தையோடு வெளியேறினால் விடமாட்டார்கள் என்பதால் கட்டைப்பையில் துணிகளுக்கு இடையே வைத்து மறைத்து எடுத்து வந்ததாக கூறியுள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் கட்டைப்பையில் குழந்தை இறந்து இருப்பது தெரிவந்துள்ளது. அதனால் குழந்தையை கணவர் சண்முகம் காளிவேலம்பட்டி பிரிவில் புதைத்து விட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டறிந்த செவிலியர் உடனடியாக திருப்பூர் மருத்துவமனைக்கு தகவலை தெரிவித்துள்ளார்.

குழந்தை இறந்ததில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதால் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் விசாரணை மேற்கொண்டுள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தையை எப்படி கட்டைப்பையில் வைத்து எடுத்து சென்றனர். மேலும், மருத்துவமனைக்கு தெரியாமல் செல்ல வேண்டிய அவசியம் என்ன? குழந்தை இறந்தவுடனேயே புதைத்துள்ள சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts