ஒரு வருடம் ஆகியும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை இல்லை : நல்லகண்ணு

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நல்லக்கண்ணு, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மற்றும் திமுக கட்சியினர் அவர்களது உருவ படத்திற்கு அஞ்சலி

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நல்லக்கண்ணு, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதாஜீவன் மற்றும் திமுக கட்சியினர் அவர்களது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வுக்கு பின் இந்திய கம்ம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்று ஒருவருடம் ஆகியும் ஸ்டெர்லைட் ஆழியை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும், இறந்தவர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.