ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குனர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி.
ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குனர்கள் ஹரீஷ், மாலதி ஆகியோரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹரீஸை 4 நாட்களும், மாலதியை ஒரு நாளும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதில் வழங்கியுள்ளது.
பாஜக நிர்வாகி ஹரீஷ், மாலதி ஆகியோரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மனு தாக்கல் செய்திருந்தது. பொதுமக்களிடம் ரூ.2438 கோடி மோசடி செய்த விவகாரத்தில் ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்கள் ஹரீஷ் மற்றும் மாலதி கைதானார்கள். இந்த நிலையில், நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.