ஓட்டல்களில் ஏசி பயன்படுத்தலாம் -தமிழக அரசு.!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து ,பார்சல்கள் மட்டுமே வாங்க அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அரசு தடை விதித்து ,பார்சல்கள் மட்டுமே வாங்க அனுமதி வழங்கியது. பின்னர், அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கியது.

ஆனால், குளிர்சாதன வசதியை பயன்படுத்த தடை விதித்தது. இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஓட்டல்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

unknown node