விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Minister of Revenue RP Udayakumar has said that action will be taken against the theaters which violate the rules.

விதிமீறும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வருவாய்த்துறை ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்குழுவினரின் அறிவுரையின் பேரில்தான் 100% இருக்கைகளுடன் இயங்க அனுமதி அலுக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காத திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், 50% சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து திரையரங்க உரிமையாளர்கள் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் 100% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.