தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு என அமைச்சர் தகவல்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தில் கூடுதல் பணி நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நிதி நெருக்கடி உள்ளபோதிலும் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.800 கோடி நிதி ஒதுக்கியுள்ளார் எனவும் அமைச்சர் பெரியசாமி கூறினார்.