கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டால் நடவடிக்கை-போலீசார் எச்சரிக்கை.!

கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டால் சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை.

கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்டால் சட்டப்படி  நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை.

சமூக ஊடகங்களில் இன்றைய இளைஞர்கள் அதிகளவில் நேரத்தை செலவழித்து வருகின்றனர். இளைஞர்கள் தங்களது சமூக வலைதள கணக்குகளில் வீடியோக்கள் வெளியிட்டு எல்லைகள் மீறி செயல்படுவது தற்போது வாடிக்கையாகி உள்ளது. கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சுய விளம்பரங்களுக்காக  வீடியோக்கள், புகைப்படங்கள்  வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு ஆயுதங்களை வைத்துக்கொண்டு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும், சமீபத்தில் இது போன்ற சம்பவத்தில் சில நபர்களை கோவை மாநகர போலீசார் கைது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இளைஞர்கள் சுய விளம்பரம் மற்றும் தேவையற்ற காரணங்களுக்காக இது போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.