நடிகர் ரஜினிகாந்த் – தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்திப்பு..!

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தனது 95–வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ்

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று தனது 95–வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் நிறுவனரும், மேற்கு வங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜி, மத்திய இணை–மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் என அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து  நடிகர் ரஜினிகாந்த் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாம் பெரிதும் மதிக்கும், மரியாதைக்குரிய பெரியவர் கருணாநிதிக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு உள்ளார்