#Breaking: கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகர் விஜய் சேதுபதி!

Actor Vijay Sethupathi performed his democratic duty at the Kodambakkam polling booth in Chennai as polling was in full swing in Tamil Nadu.

தமிழகத்தில் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை கோடம்பாக்கம் வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் சேதுபதி ஜனநாயகக் கடமை ஆற்றினார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதாக தொடங்கியது. மேலும், காலை முதலே பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில் சினிமா பிரபலங்களான நடிகர் அஜித், கமல், ரஜினி, சிவகுமார், கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் பலர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில்வாக்களித்து தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதி, மதத்திற்கு எப்போதும் அப்பாற்பட்டவன் நான். அவற்றிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என கூறிய அவர், தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார். விஜய் சைக்கிளில் வந்தது குறித்து அவரிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்தது தொடர்பாக நான் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.