#Breaking: வாக்களிக்க நடந்து வந்த விக்ரம்.. இயந்திர கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு!

Actor Vikram walks from his house in Besant Nagar, Chennai to the polling booth to cast his vote.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை நடிகர் விக்ரம் வாக்களிக்க நடந்து வந்துள்ளார். ஆனால் இயந்திரத்தில் கோளாறு காரணமாக அவர் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கிறார்.

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மேலும், காலை முதலே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரி அனைவரும் வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில், சினிமா பிரபலங்களான நடிகர் அஜித், கமல், ரஜினி, சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் தங்களது ஜனநாயக கடைமையை ஆற்றியுள்ளனர். இதனைத்தொடர்ந்து நடிகர் விக்ரம், சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை நடிகர் விக்ரம் வாக்களிக்க நடந்து வந்துள்ளார். ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் வாக்களிக்க முடியாமல் பொதுமக்களுடன் வரிசையில் காத்திருக்கிறார்.